
கோலாலம்பூர், மே-19-பாலஸ்தீனத்துக்கு மனிதநேய உதவிகளைக் கொண்டு செல்லச் முயன்ற Global Sumud Flotilla 2.0 கப்பலில் இருந்த 16 மலேசியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமை மீறல் என்பதோடு, அனைத்துலகக் கடல் சட்டங்களுக்கு எதிரான செயல் என்றும், உடனடியாக அனைத்து மலேசியர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மனிதகுலத்திற்கு எதிரான இஸ்ரேலின் தொடர் அட்டூழியங்களை உலக நாடுகள் சகித்துக் கொள்ள முடியாது; கண்டிப்பாக நீதியின் முன் அது நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
தடுத்து வைக்கப்பட்ட 16 மலேசியர்களில் S. பத்மநாதன் என்பவரும் அடங்குவார்.
இந்நிலையில், மலேசியாவுக்கு இஸ்ரேலுடன் நேரடி தூதரக உறவு இல்லாததால், அவர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க மற்ற நாடுகளின் உதவியுடன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வேளையில், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளவில் வலுத்து வருகிறது.



