
கோலாலம்பூர், செப்டம்பர்-5,சமூக ஆர்வலராக வலம் வரும் Cikgu Chandra என அழைக்கப்படும் எஸ். சந்திரசேகரன், தாம் முறைப்படி இஸ்லாத்தை ஏற்று இரு கலிமாக்களை மொழிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தாம் இஸ்லாத்தைத் தழுவியதாக எழுந்த யூகங்களை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போது திருக்குர்ஆனைக் கற்று வருவதாகவும், இந்த மாற்றத்திற்குப் பிறகு சிறந்த பண்பாளராக வாழ விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், நீதிமன்ற வழக்குகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்கத் தமக்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் Cikgu Chandra குறிப்பிட்டார்.
இந்நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குத் தமக்குச் அமைதியான சூழலை வழங்கி வழிகாட்டுமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



