Latestமலேசியா

இ.பி.எஃப் இலாப ஈவு உயரலாம், பொருளாத வல்லுநர்கள் கணிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – கடந்தாண்டின் முதல் 9 மாதங்களில் ஊழியர் சேமநிதி வாரியம் EPF உயரிய வருமானத்தைப் பதிவுச் செய்திருப்பதால், சந்தாத்தாரர்கள் இவ்வாண்டு உயரிய இலாப ஈவை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வழக்கமான சேமிப்புகளுக்கும் இலாப ஈவுத் தொகை விகிதம் 5.5%-க்கும் 6% விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கலாம் என பேங் முவாமாலாட்டின் பொருளாதார பிரிவுத் தலைவர் முஹமட் அஃப்சானிசாம் அப்துல் ரஷிட் கணித்துள்ளார்.

இ.பி.எஃப்பின் வருமான உயர்வு இரட்டை இலக்க எண்ணில் பதிவாகியுள்ளதால், 5.5 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடு வரையிலான இலாப ஈவுத் தொகை நியாயமானதே என அவர் சொன்னார்.

2023-ன் முதல் 9 மாதங்களில் அதன் முதலீட்டு வருமானம் 33 விழுக்காடு அதிகரித்து, 47.86 பில்லியனாக பதிவாகியதை அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ( MUST ) யைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் டாக்டர் ஜியோஃப்ரி வில்லியம்சும் அக்கருத்தை ஆமோத்தித்தார்.

என்னைப் பொருத்தவரை 5.5 விழுக்காட்டுக்கும் 6 விழுக்காட்டுன் இடையிலோ அல்லது அதற்கும் சற்று கூடுதலாகவோ கூட ஈவுத் தொகை அறிவிக்கப்படலாம் என The Star-ரிடம் சொன்னார்.

இ.பி.எஃபின் இலாப ஈவு மார்ச் தொடத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!