Latestமலேசியா

ஈப்போவில் 10 வயது மாணவியிடம் காம சேட்டை; பள்ளியின் இசை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, நவ 23 – ஈப்போவில் 10 வயது மாணவியிடம் காம சேட்டை புரிந்த பள்ளியின் இசை ஆசிரியர் மீது இன்று குற்றச்சாட்டப்பட்டது. இருப்பினும் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வகுப்பில் சம்பந்தப்பட்ட மாணவியின் மர்ம உறுப்பை அந்த ஆசிரியர் தொட்டதோடு, ஜூலை மாதம் தனது மர்ம உறுப்பால் அந்த மாணவியின் பின்பகுதியை உரசியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் 39 வயதான அந்த ஆசிரியர் மீது கொண்டு வரப்பட்டது.

குற்றம் நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

அந்த ஆசிரியரின் சுகாதார பிரச்சனையைக் கருத்தில் கொண்டு நீதிபதி Ainul Shahrin 5000 ரிங்கிட் ஜாமினில் ஒரு நபர் உத்தரவாததில் அந்த ஆடவரை விடுவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!