
ஈப்போ, பிப் 4 -ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா துணைத் தலைவர் ஆர்.ஜெயமணியின் பெரும் முயற்சியால் 20 அடி உயரம் கொண்ட கொடி நிர்மாணித்து கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் முன்புறம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தைப்பூச திருவிழா தொடங்கியது. தைப்பூசம் என்பது உண்மையில் ‘தை’ என்பதிலிருந்து உருவானது. எனவே இந்த பண்டிகையை இந்துக்கள் தை மாதத்தில் தினத்தன்று கொண்டாடுகின்றனர். இந்த நாள் இளமை, சக்தி மற்றும் நல்லொழுக்கத்தின் கடவுளான முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனை செய்யும் நாளாகும்.
இதனிடையே பக்தர்கள் காவல்துறை வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம்.விவேகானந்தா கேட்டுக்கொண்டார். முடிந்தவரை ஆலய வளாகத்தில் .
பட்டாசு வெடிக்கவோ அல்லது மதுபானம் அருந்தவோ கூடாது . மேலும் ஆலய வளாகத்தில் தூய்மையை பின்பன்றுவதோடு குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் போடும்படியும் அவர் வலியுறுத்தினார். . .