
வாஷிங்டன், ஜூன்-12-அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மாலை ஈரான் மீது நடத்தவிருந்த இராணுவத் தாக்குதல்களை அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இரத்துச் செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதற்குக் காரணம் என அவர் கூறினார்.
ஆனால், இந்த உடன்படிக்கை இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வரம்புக்கு மீறிய கோரிக்கைகளை வைப்பதாகவும், பேச்சுவார்த்தையில் புதிய நிபந்தனைகளைப் புகுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன் இந்த அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதே சமயம், உடன்படிக்கை இறுதி வடிவம் பெறும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
தாக்குதல் இரத்து செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலக சந்தையில் Brend கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலருக்கும் கீழ் குறைந்தது;
அதே வேளையில் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் இலாபத்துடன் நிறைவடைந்தன.



