Latestமலேசியா

கெந்திங் உணவகத்தில் RM902 மீன் பில் சர்ச்சை; உணவகம் விதியை மீறவில்லை என KPDN விளக்கம்

பெந்தோங், ஜூன்-12-கெந்திங் மலை, கோத்தோங் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில், ikan Patin மீன் உணவுக்காக 902 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த உணவகம் எந்த சட்டத்தையும் மீறவில்லை என, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் பஹாங் கிளை தெளிவுபடுத்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 13 சுற்றுப் பயணிகள் குழு இந்த உணவகத்திற்குச் சென்றபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண இரசீது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இது குறித்து அதிகாரிகளும் உடனடி விசாரணையில் இறங்கினர்.

எனினும், உணவகத்தின் விலைப் பட்டியலில் 100 கிராம் Patin மீனின் விலை 33 ரிங்கிட் 80 காசுகள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் ஆர்டர் செய்த பிரீமியம் இரக காட்டு Patin Buah மீனின் எடை 2.7 கிலோ கிராம் ஆகும். இதனால் கணக்கீட்டின்படி 902 ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, விலை நிர்ணயத்தில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை என்றும், சட்டம் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்ளேயே இந்த விலை வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் பஹாங் KPDN உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!