Latestமலேசியா

உடனடி பணத்திற்கு ஆசைப்பட்டு மோசடிக் கும்பலிடம் 20 ,000 ரிங்கிட் நகைகளை இழந்த பெண்

அலோஸ்டார் ,மே 21 – லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ஐந்து லட்சம் ரிங்கிட் விழுந்திருப்பதால் அந்த பணத்தை எடுத்து தந்தால் அதற்கு வெகுமதியாக
50,000 ரிங்கிட் கொடுப்பதாக மோசடிக் கும்பலின் ஆசை வார்த்தையை நம்பிய பெண் 20,000 ரிங்கிட் பெமானமுள்ள நகைகளை இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி புகார் செய்திருப்பதாக
அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ashari Abu Samah தெரிவித்தார். 58 வயதுடைய அந்த பெண் சனிக்கிழமையன்று மஸ்ஜிட் தானாவிலுள்ள பேரங்காடி ஒன்றுக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவரை நெருங்கிய இரண்டு பெண்களும் ஒரு நபரும் தங்களுக்கு 5 இலட்சம் ரிங்கிட் லாட்டரி பரிசுப் பணம் கிடைத்திருப்பதாகவும் அடையாளக் கார்டு இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை பெறமுடியவில்லை என்று கூறியுள்ளனர். தங்களுக்கு பரிசு பணத்தை வாங்கித் தந்தால் அதற்கு வெகுமதியாக 50,000 ரிங்கிட் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் அவர்கள் மூவரும் கூறியுள்ளனர்.

தமக்கு சுளையாக 50,000 ரிங்கிட் ரொக்கம் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களது காரில் ஏறி அருகேயுள்ள லாட்டரி நம்பர் கடைக்கு வருவதற்கு அப்பெண் இணக்கம் தெரிவித்துள்ளார். அப்போது லாட்டரி டிக்கெட்டை எடுத்து ஓடிவிடக்கூடாது என்பதால் அதற்கு உத்தரவாதமாக நகையை கழற்றி கொடுக்கும்படி அப்பெண்ணிடம் அந்த மூவரும் கேட்டுக்கொண்டதால் அவரும் தமது தங்கச் சங்கலி மற்றும் தங்கக் காப்பையும் அவர்களிடம் கழற்றி கொடுத்துள்ளார். லாட்டரி நம்பர் கடைக்கு அருகே காரை நிறுத்திய அந்த கும்பல் ஒரு லாட்டரி டிக்கெட்டை கொடுத்து பணத்தை பெற்றுவரும்படியும் அதுவரை தாங்கள் காத்திருப்பதாக கூறியுள்ளனர். அந்த பெண் நம்பர் கடைக்கு நெருங்கியபோது திடீரென மோசடிக் கும்பல் பேர்வழிகள் தங்களது காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என Ashari Abu Samah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!