Latestஉலகம்

உயிர்த்தெழ முடியும் என நம்பிக்கை ; சிட்னியில், இறந்த 80 வயது முதியவரின் உடல் உறைய வைக்கப்பட்டுள்ளது

சிட்னி, மே 29 – ஆஸ்திரேலியா, சிட்னியில், மீண்டும் உயிர் பெற்று எழ முடியும் என்ற நம்பிக்கையில், இறந்த 80 வயது முதியவரின் உடல் “கிரையோஜெனிகல்” முறையில் உறைய வைக்கப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக, உலகிலேயே, “கிரையோஜெனிகல்” முறையின் கீழ் உறைய வைக்கப்பட்டிருக்கும் முதல் நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கிரையோஜெனிகல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள,செளதன் கிரையோனிக்ஸ் (Southern Cryonics) நிறுவனத்தின் உரிமையாளரான பிலிப்ஸ் ரோட்ஸ், தனது பணியாளர்கள், தங்களின் முதல் வாடிக்கையாளரின் உடலை வெற்றிகரமாக உறைய வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த 80 வயது முதியவர் இம்மாதம் 12-ஆம் தேதி, சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரை செளதன் கிரையோனிக்ஸ் நிறுவனம் “முதல் வாடிக்கையாளர்” என குறிப்பிட்டுள்ளது.

இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டவுடன், அவ்வாடவரின் உயிரணுக்களைப் பாதுகாக்க, அவரது உடலில் திரவங்கள் செலுத்தப்பட்டன. பின்னர் உலர் ஐஸ்கட்டிகளை கொண்டு, அவரது உடலின் தட்ப வெப்ப நிலையை உரை நிலைக்கும் கீழ் 80 பாகை செல்சியசாக குறைத்தனர்.

அதன் பின்னர், செளதன் கிரையோனிக்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த உடலின் தட்ப வெப்ப நிலை உரை நிலைக்கும் கீழ் 200 பாகை செல்சியசாக குறைக்கப்பட்டு, காற்றில்லாத வெற்றிடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் கூட, அவ்வாடவரை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த உடல் உறை நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்காக, ஒரு லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது ஏழு லட்சத்து 98 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!