Latestமலேசியா

உலகின் மிக ரம்மியமான வீதிகள் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்த Petaling Street

கோலாலம்பூர், மார்ச்-15 – தலைநகரின் பிரசித்திப் பெற்ற சுற்றுலா தளமான Petaling Street, உலகின் மிக ரம்மியமான 10 வீதிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘Texas’, ஆஸ்திரேலியாவின் ‘Melbourne’, ஜப்பானின் ‘Tokyo’ உள்ளிட்ட நகரங்களுக்கு ஈடாக கோலாலம்பூரையும் ‘Time Global’ நிறுவனம் தேர்ந்தெடுத்து, நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளது.

‘Petaling Street’ அப்பட்டியலில் ஆறாமிடத்தைப் பிடித்திருக்கிறது.

சீனர் பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட அக்கடைத் தெரு China Town என்றும் அழைக்கப்படுகிறது.

சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்திய, மலாய், வங்காளதேசிகளும் அங்கு வணிகம் செய்கின்றனர்.

அப்பட்டியலில் முதலிடம் ‘Melbourne’ நகரின் ‘High Street’ வீதிக்கு கிடைத்துள்ள நிலையில், ஹாங் காங்கின் ‘Hollywood Road’ இரண்டாமிடத்தையும், Texas மாநிலத்தின் ‘East Eleventh’ மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

நிறைய உணவகங்கள், மதுபான கடைகள், Café தேநீர் கடைகள், மற்ற இடங்களில் கிடைக்காத பொருட்கள் போன்ற அம்சங்களை, ரம்மியமான வீதிகள் பட்டியலுக்கு அளவுகோலாக ‘Time Out’ பார்க்கிறது.

அதோடு, கலாச்சாரம், இரவு நேரங்களில் மக்களைக் கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்கள், ஒட்டுமொத்த சமூக உணர்வு உள்ளிட்ட அம்சங்களும் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!