Latestமலேசியாவிளையாட்டு

உலகின் 10 முன்னணி ஸ்குவாஸ் விளையாட்டாளர்களின் பட்டியலில் சிவசங்கரி இடம்பெற்றார்

கோலாலம்பூர், மே 21 – நாட்டின் முன்னணி ஸ்குவாஸ் விளையாட்டு வீராங்கனையான S. Sivasangari தற்போது உலகின் 10 முன்னணி ஸ்குவாஸ் வீராங்களைகளின் பட்டியலில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். தொழில் ரீதியிலான மகளிர் ஸ்குவாஸ் விளையாட்டாளர்கள் சங்கம் வெளியிட்ட ரேங்கிங் அல்லது உலக தர வரிசைப் பட்டியலில் சிவங்கரி 10 ஆவது இடத்தை பெற்றுள்ளார். Nicol David மற்றும் Low Wee Wern னுக்கு அடுத்து பெண்களுக்கான உலகின் முதல் 10 விளையாட்டாளர்களின் பட்டியலில் தற்போது சிவசங்கரியும் இடம் பெற்று சாதனை படைத்ததோடு மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். kedah வைச் சேர்ந்த 25 வயதுடைய சிவசங்கரி அண்மையில் London Clasic ஸ்குவாஸ் வெற்றியாளர் பட்டத்தை வென்றதன் மூலம் உலகின் தர வரிசைப் பட்டியலில் 11ஆவது இடத்திலிருந்து 10 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!