Latestமலேசியா

உலு சிலாங்கூரில் ஆலயம் நுழைந்து, இந்தியர்களை இழிவாகப் பேசிய பெண் விவகாரம்; கடையை உடைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்படும் – வீ.பாப்பராயீடு

உலு சிலாங்கூர், மார்ச் 21 – உலு சிலாங்கூர், ஸ்ரீ தெரத்தாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த இந்திய முஸ்லிம் பெண் ஒருவர் இந்தியர்களை இழிவாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணுக்கும் அவரது வங்காளதேச கணவனுக்கும் சொந்தமான அந்த பிரச்சனைக்குறிய கடை நிர்மாணிப்பு உடைக்கப்படும் என கூறியுள்ளார் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு.

சம்பந்தப்பட்ட ஆலயத்தின் நேர் எதிரே உள்ள நிலத்தில் அப்பெண்ணும் அவரின் கணவரான வங்காளதேச ஆடவரும் சட்டவிரோதமாக bangla உணவகம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றனர்.

இதனால், ஆலயத்திற்கு பெரும் இடையூறு ஏற்படும் என்று ஆலய நிர்வாக்கத்தினர் சந்தித்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வங்காளதேச ஆடவரின் மனைவி அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்து ‘india babi’ என்று கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து இன்று கம்போங் முகமது தாய்பிற்கு, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினார் வீ. பாப்பாராய்டு உட்பட நகராண்மைக் கழக அதிகாரிகள் வருகை புரிந்து தீர்வுகளை வழங்கியுள்ளதாகச் உலு சிலாங்கூர் பி.கே.ஆர் நகராண்மைக் கழக கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை திறக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளனர்.

விரைவில் நீதிமன்ற உத்தரவுடன் அவர்கள் கட்டிவரும் அந்த உணவகம் உடைக்கப்படும் என பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு விளக்கமளித்தார்.

இதனிடையே, ஆலய செயலாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மாவட்ட போலிஸ் தலைவரிடம் விவரம் கேட்கப்படும் என பாப்பாராயிடு கூறியிருக்கின்றார்.

அதே சமயத்தில், இவ்விவகாரம் கையாளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளி பதிவு எதனையும் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!