Latestமலேசியா

ஊடகவியலாளர்களுக்கான ஹவானா கொண்டாட்டம்: அனைத்துலக அங்கீகாரத்தை விட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே முக்கியம் – பிரதமர்

கோலாலம்பூர், மே 27 – மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனும் நிலையில் எல்லைகளற்ற நிருபர்கள் RSF உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மலேசியா தரமிறக்கப்படுவதைப் பொருட்படுத்தாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, தரவரிசையை விட மிக முக்கியமானது.

அனைத்துலக அங்கீகாரத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதை விட நாட்டைக் காப்பாற்ற, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

இனவெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் எதிராக இருப்பதால் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் தரமிறக்கப்பட்டாலும் தனக்கு கவலையில்லை என்றும் கூறியிருந்தார்.

ஒருவேளை இனவாதம் அல்லது மதவெறியை ஊடுருவ அனுமதித்தால், அது மத நல்லிணக்கத்திற்கான சாத்தியத்தியத்திற்கு வித்திடாது என சரவாக், கூச்சிங்கில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய தேசிய ஊடகவியலாளர் கொண்டாட்ட தினமான – ஹவானா 2024-யின் இன்றைய நிறைவு விழாவில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!