Latestமலேசியா

ஊடகவியலாளர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது – பாமி பாட்சில்

கூச்சிங், மே 25 – நாளை தொடங்கி 3 நாட்களுக்கு கூச்சிங்கில் நடைப்பெறவுள்ள தேசிய ஊடகவியலாளர் தினம், Hawana 2024 நிகழ்ச்சியின் போது,
ஊடகவியலாளர்களுக்கான நற்செய்தி காத்திருப்பதாக அறிவித்துள்ளார் தொடர்புத் துறை அமைச்சர் பாமி பாட்சில்.

அந்த நற்செய்தி, இந்நிகழ்ச்சியியை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மே 27ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் போது அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

ஊடகவியளாளர்களுக்கான HAWANA2024 நிகழ்ச்சிக்காக சரவாக் சென்றுள்ள அமைச்சர், அங்கு சரவாக் கவர்னர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபரின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்று அவரைச் கூச்சிங்கில் உள்ள அஸ்தானாவில் சந்தித்தபோது அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, தேசிய ஊடகவியலாளர் தினம் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக நடைப்பெற்று வருவதாகவும், இவ்வாண்டு சிறப்பு அம்சமாக ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 6 ஊடக நிறுவனம் உட்பட வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாமி பாட்சில் தெரிவித்தார்.

இன்றைய சரவாக் கவர்னருடனான சந்திப்பில் பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி நூர்-உல் அஃபிடா கமாலுடின், தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் மற்றும் சரவாக் பணியகத்தின் தலைவர் ஹம்தான் இஸ்மாயில் ஆகியோடும் உடன் கலந்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!