Latestசினிமா

எடிசன் திரை விருது பட்டியலில் ஜெயிலர், லியோ பல பிரிவுகளில் ஆக்கிரமிப்பு

சென்னை , ஜன 29 – 2023 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கான எடிசன் திரை விருதுகள் தேர்வு பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் www.edisonawards.in இணையதளம் மூலம் தங்களுக்கு பிடித்தமான திரை கலைஞர்களை இணையவாக்கும் மூலம் வாக்களித்து வருகின்றனர்.

பல்வேறு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் அதிகப்படியான இடம் பிடித்திருக்கும் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர், விஜய் நடித்த லியோ திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் மூலம் 40 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தனர்.

இவ்வாண்டு தேர்வு பட்டியல் வெளியிட்ட ஒரு வாரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து உள்ளனர். இவ்வாக்களிப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாகும் என சமூக வலைதள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் அதிகப்படியான வாக்குகளை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் கூறியதாவது, “இன்னும் எடிசன் விருதுக்கான விளம்பர யுக்திகளை ஆரம்பிப்பதற்கு முன்பே 10 லட்சம் பேர் வாக்கு செலுத்தி இருப்பது பெருமைக்குரியதாகும். மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் உள்ள தினசரி நாளிதழ்கள், பண்பலை தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ய உள்ளோம். அதன் பிறகு கடந்த ஆண்டு விட அதிகப்படியான வாக்குகள் மற்றும் பார்வையாளர்களாக கொண்ட விருதாக மக்களால் கொண்டாடப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!