Latestமலேசியா

எதிர்காலத்தில் சம்சூரி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக வரும் சாத்தியத்தை முஹிடின் யாசின் மறுக்கவில்லை

கோலாலம்பூர், நவ 28- கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெங்கானு மந்திபெசர் அஹ்மட் சம்சூரி மொக்தார், எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக வருவதற்கு தயார்படுத்துவதற்கான முன்னெடுப்பாக திகழ்கிறார் என்பதை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைவரான முஹிடின் யாசின் மறுக்கவில்லை . தனது தலைவர்களை முன்னிலைப்படுத்த கூட்டணி மேற்கொண்டுள்ள ஒரு வியூக நடவடிக்கை இதுவாகும் என அவர் கூறினார். சம்சூரி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை மறுக்கமுடியாது. 16வது பொதுத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ, நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் என்ற நம்பிக்கையுடன் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி வரலாறு படைக்க ஒரு காலம் வரும் என்று முஹிடின் யாசின் தெரிவித்தார்.

எனவே, அனைத்தும் வியூகமான நடவடிக்கையாகும். அறிவார்ந்த, திறமையான, பாராட்டத்தக்க நடத்தை கொண்ட பல தலைவர்களைக் கொண்டுள்ளோம், மேலும் மிதவாதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் எங்களிடையே உள்ளனர் என்பதை மக்களுக்கு காட்ட முடியும் என கெமாமனில் ஃபெல்டா கெர்த்தே 5 இல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது முஹிடின் தெரிவித்தார். சம்சூரியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தயாராக்குவதற்கு அவரை பெரிக்காத்தான் நேசனனல் வளர்த்துவருகிறது என்று வெளியாகியிருக்கும் ஆருடங்கள் குறித்து வினவப்பட்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!