Latestஉலகம்மலேசியாவிளையாட்டு

எனது வெற்றிக்கு வார்த்தையில்லை சிவசங்கரி கூறினார்

லண்டன், ஏப் 2 – London Squash classic போட்டியில் தாம் அடைந்த வெற்றியை வர்ணிப்பதற்கு வார்த்தையில்லையென தேசிய ஸ்குவாஸ் வீராங்கனையான சிவசங்கரி சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். இப்போட்டியின் இறுதியாட்டத்தில் எகிப்தின் Hania El Hammamy யை 81 நிமிட நேர போராட்டத்திற்கு பின் வீழ்த்திய பின் இதைவிட சுருக்கமாக எதுவும் கூறமுடியாது என அவர் கூறினார். இந்த வாரம் முழுவதும் இந்த போட்டியியில் விளையாடிய தாம் பரபரப்பான தாக்குதல் பாணியிலான விளையாட்டில் கவனம் செலுத்தியதன் மூலம் உலகின் பிபலமான விளையாட்டாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதாக தொழில் ரீதியிலான ஸ்குவாஸ் விளையாட்டாளரான சிவசங்கரி தெரிவித்தார். கார் விபத்திற்குள்ளாகி முழுமையாக குணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு மீண்டும் ஸ்குவாஸ் விளையாட்டிற்கு அவர் திரும்பினார். London Squash Classic போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அப்போட்டியில் வென்ற முதல் மலேசிய ஸ்குவாஸ் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

உண்மையில் இந்த போட்டியில் காலிறுதியாட்டம், அரையிறுதி ஆட்டம் மற்றும் இறுதியாட்டத்தில் உலகின் முன்ணி ஸ்குவாஸ் வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்த்தி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியது மறக்க முடியாது இனிய அனுபவம் என சிவசங்கரி தெரிவித்தார். உலகின் நான்கு முன்னணி விளையாட்டாளர்களில் இப்போட்டியில் மூவரை வீழ்த்தியதோடு மட்டுமின்றி ஒவ்வொரு ஆட்டத்தில் களத்தில் இறங்கும்போது தம்மை முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதால் எதிர்த்து போட்டியிட்டவர்களை வீழ்த்தும் மனோதைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றிருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை பார்க்கையில் இந்த வெற்றி நினைத்து பார்க்க முடியாததை பயணத்தை தந்துள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!