
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அப்பகுதியில் பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அப்படியே இருந்தாலும், ஏராளமான நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இந்த நிலை, எல்லை தாண்டி பயணம் செய்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
பயணத்தின் போது எரிபொருள் கிடைக்காமல் சிக்கிக் கொள்ளும் அபாயமும் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே நிலமை சீராகும் வரை, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதே சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



