
ஷா ஆலம் – ஜூலை 8 – அண்மையில் புத்ரா ஹைட்ஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றும் இந்தச் சம்பவத்தில் வெளிப்படைத்தன்மை கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவதாகவும் 15வது சிலாங்கூர் மாநில அவையில் உறுதிபூண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான எந்த தகவலையும் தனது கட்சி மறைக்காது என்றும், விசாரணையின் முடிவுகளை அனைத்து தரப்பினருக்கும் வெளிப்படையாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் சிலாங்கூர் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறியுள்ளார்.
அரசாங்கம் பொறுப்பற்றதாக செயல்படுகின்றது என்ற கருத்தினை அவர் முற்றிலும் மறுத்துள்ள நிலையில், சம்பவம் நடந்த முதல் 2 நிமிடங்களில் முழு மாநில அரசும் அவ்விடத்தில் விரைந்து செயல்பட்டுள்ளனர் என்று சான்றுகளுடன் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதையும், இனி எந்தவொரு உயிரிழப்பும் ஏற்பட கூடாது என்பதிலும் மாநில அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.