Latestமலேசியா

எஸ்.பி.எம் தேர்வு: பேராவில் இந்திய மாணவர்களின் தேர்ச்சி உயர்வு

ஈப்போ, மே 27 – பேராவில் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்திய மாணவர்களும் சிறந்த தேர்ச்சியை பெற்று பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெருமையை தேடிந்தந்துள்ளனர்.

ஈப்போவி ஸ்ரீ புத்ரி இடை நிலைப்பள்ளியில் பல மாணவிகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். அப்பள்ளியில் அனக லட்சுமி வேலாயுதம் , 11 ஏ, யோகாஷினி சுரேஷ் 11ஏ, பாக்கிய லட்சுமி ஆறுமுகம் சோலை மலை 11ஏ, கார்த்திகா நீலமேகம், 10 ஏ, கவிஷ்னா சீனிவாசன் 9 ஏ, 1 பி, 1 சி, நோர்மிதா பொன்னிராஜா, 9 ஏ , கேஷ்வினி மலர் நல்லகுமார் 9 ஏ, பகவதி காரத்திகேசு 6 ஏ நிலையில் தேர்ச்சி பெற்றனர்.

பேரா மாநிலத்தில் 95 விழுக்காடு இந்திய மாணவிகள் பயிலக் கூடிய பள்ளியாக இது விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தங்களின் தொடக்க கல்வியை தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடை நிலையில் எஸ். பி. எம் தேர்வு மாணவன் தனு அக்‌ஷேயே சிவசுப்பிரமணியம் 9 ஏ பெற்று அப்பள்ளியின் சிறந்த மாணவராக தேர்வு பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!