Latestமலேசியாவிளையாட்டு

ஏப்ரல் மாதத்தின் உலக விளையாட்டு வீராங்கனையாக சிவசங்கரி முடிசூட்டப்பட்டார்

கோலாலம்பூர், ஜூன் 7 – தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை S. Sivasangari , London Classic தொடக்கப் போட்டியில், முதல் நிலை வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றதற்காக உலக விளையாட்டுகளால் கடந்த ஏப்ரல் மாதத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.

நேற்றிரவு The World Games முகநூல் பதிவின்படி, ஒரு சவாலான போராட்டத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதற்கான அவரது எழுச்சிமிக்க பயணத்திலிருந்து இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாக வர்ணிக்கப்பட்டார்.

உலகில் மகளிர் ஸ்குவாஸ் விளையாட்டாளர்களின் தரப் பட்டியலில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ள  Sivasangari Subramaniam, மதிப்புமிக்க GillenMarkets London Squash Classic பட்டத்தை வென்றார். அப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை விளையாட்டாளரான Nour El Sherbini யையும் , அரையிறுதி போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான Nele Gilis சையும் இறுதியாட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான Hania El Hammamyயையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்.

உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் சிக்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். அவருடைய தலை, முதுகுத்தண்டு மற்றும் கழுத்து மோசமான காயத்திற்கு உள்ளாகின.
மேலும் அவர் இனி நடக்கவே மாட்டார் என்று மருத்துவர்கள் அஞ்சினர். இறுதியில் சிவசங்கரி நடந்தார், Squash போட்டியில் வெற்றியும் பெற்றார் என The World Games  முகநூலில் பதிவிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உலக விளையாட்டு வீராங்கனையாக தேர்வு பெற்றதன் மூலம் சிவசங்கரி பட்டயமும் முத்திரைப் பரிசும் பெறுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!