Latestஉலகம்

ஏர்பஸ் ஒப்பந்தத்தில் ரூ.100 மில்லியன் லஞ்சப் புகார்; இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் கைது

கொழும்பு, செப்டம்பர்-5,இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் மகனும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷே, ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 18-ஆம் தேதி வரை அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

​தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், 2013-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 10 விமானங்களைக் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்த ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பில் அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக முன்னதாக விசாரணை நடத்தப்பட்டது.

​சிங்கப்பூர் வங்கி கணக்குகள் மூலமாக நாமல் ராஜபக்ஷே சுமார் 800,000 அமெரிக்க டாலர் லஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கொழும்பு லஞ்ச தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

​எனினும், தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள 40 வயதான நாமல் ராஜபக்ஷே, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!