Latestமலேசியா

ஐரோப்பிய சுற்றுப் பயணிகளின் மனங்கவர்ந்த ஆசிய நாடுகளில் மலேசியாவுக்கு 4-வது இடம்

கோலாலம்பூர், ஜூன்-1 – ஐரோப்பிய சுற்றுப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆசிய நாடுகளில் மலேசியா நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தாய்லாந்து, இந்தோனீசியா, ஜப்பான் ஆகியவற்றுக்கு அடுத்து, ஐரோப்பியர்களின் மனங்கவர்ந்த நாடாக மலேசியா விளங்குவதாக, சுற்றுலா முன்பதிவுத் தளமான Agoda கூறுகிறது.

மலேசியாவில் தங்குமிடங்களுக்கான தேடல்களில், பிரான்ஸ் நாட்டவர்களே முதலிடம் வகிக்கின்றனர்.

அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் இத்தாலி, United Kingdom, ஸ்பெயின் மற்றும் ஹாலந்து நாட்டினர் உள்ளதாக Agoda தெரிவிக்கிறது.

ஐரோப்பிய கோடை கால விடுமுறையில் சுற்றுலா மேற்கொள்ள, ஐரோப்பியர்கள் மத்தியில் ஆசியாவே முதலிடம் வகிப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டை விட, ஆசிய நாடுகளின் தங்குமிடங்களுக்கான தேடல்கள் இவ்வாண்டு 52% அதிகரித்திருப்பதே அதற்கு சான்று என Agoda மேலும் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!