Latestமலேசியா

ஒரு விரல் புரட்சி: தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

புத்ராஜெயா, மே-12-தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், விஜய்யை தனது “நண்பர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரையில் ஹீரோவாக ‘தீய சக்திகளை’ அழித்து வந்த விஜய்யிடம், இப்போது தமிழக மக்கள் உண்மையான மற்றும் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, விஜய்யின் ‘சர்கார்’ படப் பாடலான “ஒரு விரல் புரட்சி”யைக் குறிப்பிட்ட பிரதமர், அந்த புரட்சி இப்போது புதிய வரலாற்றைப் படைக்கக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.

60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!