Latestமலேசியா

ஓட்டுநர் உரிமம் இல்லாமல், காலவாதியான சாலை வரியுடன் காரை ஓட்டிய ஆடவர் கைது

தனா மேரா, ஏப்ரல் 12 – கேமரன் மலை, தானா மேராவில் கடந்த வியாழன் அன்று, காலாவதியான சாலை வரியுடன் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிய ஆடவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

2 கீலோமீட்டர் தூரம் வரை ஓட்டம் பிடித்த அந்த 30 வயது ஆடவர், கம்போங் குசியால் பாருவில் வெற்றிகரமாகப் பிடிப்பட்டான்.

முன்னதாக, தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர் superintenden முகமட் ஹக்கி ஹஸ்புல்லா அவரது அதிகாரிகள் மேற்கொண்ட Op Selamat 22ன் போது, மதியம் 3 மணியளவில், BMW வகை கார் ஒன்று அங்கீகரிக்கப்படாத இடத்தில் U-டர்ன் செய்துள்ளதைப் பார்வையிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, அஜாக்கிரதையாகவும் மற்ற வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தைச் செலுத்திய அந்த ஆடவரை சாமர்த்தியமாகப் பிடித்த காவல் துறையினர், பல்வேறு பட்டாசுகள் அடங்கிய பெட்டி ஒன்றியையும் கண்டெடுத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் செய்த தவற்றையும், தனது உபயோகத்திற்காகப் பட்டாசுகளை வைத்திருந்ததையும் ஓப்புக்கொண்டதாக முகமட் ஹக்கி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!