Latestஉலகம்

கணவனின் பிடிவாதத்தால் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி

திருவனந்தபுரம், பிப்ரவரி 24 – இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல மறுத்து, கடைசியில் அவர் உயிரிழக்கக் காரணமான கணவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

அச்சம்பவம், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நிகழ்ந்திருக்கிறது.

யூ டியூப்பில் பார்த்த அக்குபஞ்சர் முறையிலேயே குழந்தையைப் பிரசவிக்க வேண்டும் என பீவி எனப்படும் தனது இரண்டாவது மனைவியைக் அவன் கட்டாயப்படுத்தியிருக்கிறான்.

அதுவும் தனது முதல் மனைவியின் மேற்பார்வையில் தான் அந்த ‘அக்குபஞ்சர் பிரசவம்’ நடைபெற வேண்டும் என அவன் ஒற்றைக் காலில் நின்றிருக்கின்றான்.

இதனால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்து பீவியை அவ்வாடவன் கருணையே இல்லாமல் தடுத்திருக்கிறான்.

வீட்டில் அந்த ‘அக்குபஞ்சர் பிரசவம்’ முடிந்து மயக்கமுற்று பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பீவியை கண்டு பீதியில், அந்த பிடிவாதக்கார கணவன் அவரையும், பிறந்தக் குழந்ததையும் மருத்துவமனைக் கொண்டுச் சென்றார்; அங்கே மனைவி இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.

கணவனின் பிடிவாதத்தால் பரிதாபமாக உயிரிழந்த பீவி, ஏற்கனவே மூன்று குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமாகத் தான் பிரசவித்திருக்கிறார்.

அவ்வாடவனின் செயல் குறித்து ஆத்திரமும் அதிர்ச்சியும் தெரிவித்த கேரள சுகாதார அமைச்சர், அது ஒரு கொலைக்குச் சமம் என வர்ணித்தார்.

அவ்வாடவரை உடனடியாக கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸ் கைதுச் செய்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!