Latestமலேசியா

கண்ணாடியிலாத X-T50 மற்றும் GFX100S II கேமராக்கள்: Fujifilm-மின் புதிய அறிமுகம்

கோலாலம்பூர், மே 30 – புகைப்படங்கள் எடுப்பதற்கான கருவியாக தற்போது ஸ்மார்ட் கைபேசிகள் பிரபலமாக இருந்தாலும், கேமராக்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதிலும் குறிப்பாக தொழில் வல்லுநர்கள் மற்றும் புகைபடம் எடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்ட ஆர்வலர்கள் கேமராக்களில் படம் எடுப்பதே விரும்புவார்கள்.

இந்நிலையில், நூற்றாண்டுகளாகக் கேமரத் தயாரிப்பில் பிரசித்துப் பெற்ற நிறுவனமான, Fujifilm அதன் புதிய X series shooter-களில் X-T50, மற்றும் GFX100S II எனும் இரண்டு கேமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த X-T50 கேமராவனது சுமார் 436 கிராம் எடையில் கச்சிதமாகவும் இலகுவாக, அதிவேக பட செயலாக்க இயந்திரமாக செயல்படும் என மலேசியா Fujifilm நிர்வாக இயக்குநர் Kensuke Aragane தெரிவித்திருக்கிறார்.

இந்த X-T50 கேமராவின் விலை RM 7,998 ரிங்கிட்டாகவும், X-T50/XF 16-50mm கேமராவின் விலை RM 9,998 ரிங்கிட்டாகவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், GFX100S II-யில் 35 mm full-frame சென்சரை விட ஏறக்குறைய 1.7 மடங்கு பெரியதாக format sensor பொருத்தப்பட்டுள்ளது.

இக்கேமரா 102 MP அதிவேக சென்சருடன், தொடர்ச்சியான படப்பிடிப்பு வேகத்தை வினாடிக்கு 7.0 பிரேம்கள் வரை வழங்குகிறது.

இது நகரும் படங்களையும் துல்லியமாக பிடிக்கும் திறன்களுடன் வடிவமைக்கப்படுள்ளது. இந்த GFX100S II-யின் விலை RM 26,888 ரிங்கிடாகும்.

இதனிடையே, இந்த இரண்டு புதிய கேமராக்களுக்கு ஏற்ப, இரண்டு கேமரா lensகளையும் நேற்று கோலாலம்பூரில் Fujifilm அதிகராப்பூர்வமாக அறிமுகமும் செய்தது.

ஆர்வமுள்ள பொதுமக்கள் Fujifilm-மின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சிறப்பு சலுகைகளைப் பெற்று இக்கேமராக்களை வாங்கி கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!