Latestமலேசியா

கலை மற்றும் கலாச்சார (MOTAC) கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்

புத்ரா ஜெயா, ஜூன் 6 – சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (MOTAC) கட்டிடத்திற்கு நேற்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். வெடிகுண்டு பரிசோதிக்கும் பிரிவினர் ‘புரளி’யை ஒத்திருக்கும் போலி வெடிகுண்டை ஆராய்ந்ததாகவும் அவற்றில் வெடிகுண்டு போன்ற பொருளில் பிவிசி கம்பி மற்றும் கால அளவு இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக புத்ரா ஜெயா போலீஸ் தலைவர் A. Asmadi Abdul Aziz தெரிவித்தார். நேற்று காலை மணி 11.19 மணியளவில் ஒரு கூரியர் மூலம் பொட்டலம் ஒன்று அமைச்சின் கீழ்த்ளத்தில் இருப்பதாக சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ Tiong King Sing கிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மதியம் 2.45 மணியளவில் அந்த பொட்டலம் 14வது மாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, ​​அந்த பொட்டலத்தில் பிவிசி குழாய்கள் மற்றும் வெடிகுண்டு கம்பி என இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு அகற்றும் பிரிவு அந்த கட்டிடத்திற்கு விரைந்தது.

தீவிர பரிசோதனைக்குப் பின் அந்த போலி வெடிகுண்டின் உள்ளடக்கங்கள் போலியானது என கண்டறியப்பட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் Asmadi தெரிவித்தார். இதற்கு முன்னதாக MOTAC கட்டிடத்தின் 14வது மாடியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மாலை 3.40 மணியளவில் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பாதுகாப்பை கட்டுப்படுத்துவற்காக அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் போலீசார் மற்றும் 2 மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்கண்டறியும் பிரிவுனரும் அங்கு சோதனை நடத்தியதில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளியென தெரியவந்ததாக Asmadi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!