கோலாலம்பூர், ஏப்ரல் 2 – 10 ஆண்டுகளுக்கு மேலாக, சவால்மிக்க மாணவர்களை தேர்ந்தெடுத்துத் தகுந்த திட்டங்களை வடிவமைத்து, அவர்களை மேம்படுத்தி வருகிறது கல்வி சமுக நல ஆய்வு அறவாரியமான, EWRF.
இந்நிலையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி திரட்டும் நோக்கி புதையல் தேடும் போட்டி ஒன்றை கடந்த 23ஆம் திகதி மார்ச் அன்று நடத்தியது, EWRF.
130க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டி, ரோயல் சிலாங்கூர் கிளப்பில் தொடங்கி போர்ட் டிக்சனில் உள்ள அங்காசா குடியிருப்பு பகுதியில் முடிவுற்றது.
ஒரு காரில் நால்வர் என 35 குழுக்களாகப் போட்டியாளர்கள் பிரிந்து பல விகடமான கேள்விகளுக்கு விடைதேடும் வகையில் இப்புதையல் போட்டி நடந்தப்பட்டது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் அன்பளிப்பாக ஒரு நாள் அங்காசா குடியிருப்பில் தங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இப்போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி முழுவதுமாக அறவாரியத்தின் முக்கிய நடவடிக்கைகளான இளையோருக்கான ஆங்கிலம் வகுப்பிற்கும் இடைநிலைப் பள்ளிகளில் நடத்தப்படும் மாணவர் உருமாற்று திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் என EWRF தலைவர் கோவிந்தசாமி தெரிவித்தார்.