
சிலாங்கூர், அக்டோபர் 28 – ஹுலு சிலாங்கூர் (Hulu Selangor), கலும்பாங் (Kalumpang) பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக இன்று காலை காட்டுப்பன்றியுடன் மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து 10 சக்கரங்களைக் கொண்ட லாரி மீது மோதியதில், 53 வயதுடைய உள்ளூர் ஆடவர் காருக்குள் சிக்கி மயக்கமடைந்தார்.
காலை 7.16 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, குவாலா குபு பாரு (Kuala Kubu Bharu) தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனர்.
பின்னர், அவர் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். காலை 7.50 மணியளவில் மீட்புப் பணி நிறைவடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசல் அஸ்பார் (Ashrul Riezal Asbar) தெரிவித்தார்.



