
கோலாலம்பூர், செப்டம்பர்-17,தீபகற்ப மலேசியாவின் 35 பகுதிகளில் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால், காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது.
காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டு முறையின் (APIMS) தரவுகளின்படி, 35 கண்காணிப்பு மையங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதுடன், குறியீட்டு அளவு 180 வரை பதிவாகியுள்ளது.
வட்டார காட்டுத் தீயினால் ஏற்பட்ட எல்லை கடந்த புகை, வீசும் காற்றின் திசை மாற்றத்தால் தீபகற்பத்தின் பல மாநிலங்களை பாதித்துள்ளது.
நிலைமையை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, பாதுகாப்பு சுவாசக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



