Latestமலேசியா

காற்றில் பறந்து வந்த விளம்பரப் பலகை மேலே விழுந்து இந்திய மாது காயம்

ஜெராண்டுட், மார்ச்-4, பஹாங், ஜெராண்டுட்டில் மழையின் போது பலத்தக் காற்று வீசியதில் பிய்த்துக் கொண்டு பறந்து வந்தப் விளம்பரப் பலகைப் பட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இந்திய மாது காயமடைந்தார்.

அச்சம்பவம் தோக் காஜா சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது.

பறந்து வந்த விளம்பரப் பலகை மேலே விழுந்ததில் 57 வயது ஜி.முனியம்மாவின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டதோடு, நெற்றியும் கண்களும் வீங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த Alam Flora தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த சம்பவத்தின் வீடியோவை நெட்டிசன் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர, அது போலீசின் கவனத்தைப் பெற்றது.

பச்சை சமிக்ஞை விளக்கு வந்ததும் பயணத்தைத் தொடர்ந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த விளம்பரப் பலகை அம்மாது மீது விழு, மோட்டார் சைக்கிளோடு அவரும் கீழே விழுந்து காயமடைந்தார்.

அவர் சிகிச்சைக்காக ஜெராண்டுட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பம் போலீசில் புகார் செய்திருக்கிறது.

எனினும் அது சாலை விபத்தல்ல, மாறாக இயற்கையால் நிகழ்ந்த சம்பவம் என்பதால் மேற்கொண்டு விசாரணை நடைபெறவில்லை என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!