கோலாலம்பூர், ஏப் 3 – Allah பதம் கொண்ட காலுறைகள் தொடர்பான விவகாரத்தை இனியும் கையில் எடுப்பதை கைவிடும்படி அல்லது இதனை சர்ச்சையாக்குவதை நிறுத்திக்கொள்ளும்படி அம்னோ இளைஞர் பிரிவுத்தலைவர் டாக்டர் Akmal Saleh வை சபா அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது. அந்த காலுறைகள் விநியோகம் கே.கே மார்ட் விற்பனை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இல்லையென்பதோடு இதற்காக கே.கே. நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனையை அக்மால் விட்டுவிட வேண்டும் என சபா அம்னோவின் தலைவர் Bung Mukhtar வலியுறுத்தினார்.
Akmal கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது முக்கியம் அல்ல. அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரத்தை இனியும் சர்ச்சையாக்காமல் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி அம்னோவின் தலைவர் Ahmad zahid Hamidi மற்றும் பேரரசரும் கேட்டுக்கொண்டிருந்தனர் என்பதையும் Bung Mukhtar சுட்டிக்காட்டினார்.