
கோலாலம்பூர், ஜூன் 16 – கிளந்தானில் 16 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டது மற்றும் கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக ஆடவனுக்கு விதிக்கப்பட்ட 32 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 22 பிரம்படிகளை கோத்தா பாரு உயர்நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
குற்றவாளியான Amir Sharif Muhamad என்ற நபர் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செய்திருந்த மேல் முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சம்பவம் நடந்த அன்று காலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் Kampung Bunut Susuவிலுள்ள உள்ள தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் , தனியாக இருந்த அந்த பெண்ணுக்கு எதிராக அமிர் ஷாரிப் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தது மற்றும் அப்பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றத்தின் தீவிரவாதத்தை கருத்திற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நியாமானது என நீதித்துறை ஆணையர் அஷார் மொக்தார் தீர்ப்பளித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நுர்ஷாஸரின் பல்கிஸ் ( Nurshazreen Balqis) என்ற சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக அச்சிறுமியின் தந்தையின் மைத்துனருமான அமிர் ஷரிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.



