
கோலாலம்பூர், ஏப்ரல்-15-கோலாலம்பூர் Jalan Klang Lama-வில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை Rapid Bus நிறுவனம் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
மார்ச் 11 சம்பவத்தில் அந்த Rapid KL பேருந்து பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் விசாரணை முடியும் வரை பணியிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அவ்விபத்தில் தனது வாகனம் சேதமடைந்ததாக Lee Teng Hon எனும் உரிமையாளர் ஃபேஸ்புக் (Facebook) பதிவில் குற்றம்சாட்டி, இழப்பீடு பெற தாமதம் ஏற்படுவதாக கூறியிருந்தார்.
பலமுறை தொடர்பு கொண்டும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்த நிலையில், இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு, காப்புறுதி மற்றும் இழப்பீடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிற்ற Rapid Bus, போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டது.
பயணிகளின் பாதுகாப்பே தங்களின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள Rapid Bus நிர்வாகம், ஓட்டுநர்களுக்கான பயிற்சி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து மேம்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



