
கோலாலம்பூர், செப் 12 – தரைப்போக்குவரத்து நிறுவனம் மூலம், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பேருந்து சேவைகள் ஒருங்கிணைக்கப்படும் என கூறியுள்ளார் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்.
தற்போது Rapid Bus, GoKL பேருந்து, Smart Selangor பேருந்து என மூன்று வகையான பேருந்து சேவைகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கி வருகின்றன.
இந்த 3 சேவைகளும் ஒரே பாதைகளில் பயணிக்காமல் இருக்க இச்சேவைகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். மக்களுக்கு தரமான பேருந்து சேவைகளை வழங்க, இந்த ஒருங்கிணைப்பு திட்டம் சுமூகமாக நடைப்பெற வேண்டும் என அந்தோனி லோக் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 724 பேருந்துகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 4000 பேருந்துகள் தேவையுள்ள நிலையில், இது குறைவான எண்ணிக்கையாக இருக்கிறது.
இவ்வவருட இறுதிக்குள் நாள் ஒன்றுக்கு 1000 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்ய தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சுமார் 150 Rapid KL பேருந்துகள் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன, அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வைக்கலாம். மேலும், பேருந்துகள் வராத வழித்தடங்களில் செயல்பட புதிய பேருந்து நடத்துநர்களை நியமிக்கலாம் என அந்தோனி லோக் தெரிவித்தார்.
இன்று பண்டான் இன்டாவிலிருந்து மஸ்ஜிட் ஜாமெக்கிற்கான Rapid KL பேர்ந்து சேவையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார்.