Latestமலேசியா

குறுக்கோட்டத்தில் கலந்துகொண்ட போலீஸ்காரர் மயங்கி விழுந்து வெப்ப வாதத்தினால் உயிரிழந்தது குறித்து புக்கிட் அமான் விசாரணை நடத்தும்

ஈப்போ, ஜூன் 4 – பேராவில் குறுக்கோட்ட பயிற்சியில் கலந்துகொண்ட பொது நடவடிக்கை படையின் போலீஸ்காரர் ஒருவர் வெப்ப வாதத்தினால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து புக்கிட் அமான் விசாரணையை மேற்கொள்ளும். இதனை புக்கிட் அமான் நிர்வாக இயக்குனர் அஸ்மி அபு காசிம் (Azmi Abu Kassim) உறுதிப்படுத்தினார்.

இதனிடையே இதுபோன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது நிர்ணயிக்கப்பட்ட நடப்பு விதிமுறையாகும் என Ulu Kinta பொது நடவடிக்கை மையத்தின் கமாண்டர் Hafiz Kadir தெரிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த போலீஸகாரரின் மரணம் தொடர்பான அறிக்கை ஏற்கனவே புக்கிட் அமானுக்கு அனுப்பப்பட்டுள்தாகவும் அதன் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

பொது நடவடிக்கை படையின் குறுக்கோட்ட பயிற்சியின்போது ஈப்போ , 7 ஆவது பட்டாளத்தின் Planton 6 ஆவது பிரிவைச் சேர்ந்த Lance Corparal சுல்கிப்ளி ரோசாக் (Zulkifli Rozak ) வியாழக்கிழமை கீழே விழுந்ததால் சுயநினைவு திரும்பாமலேயே வெப்ப வாதம் மற்றும் உடல் உறுப்பு செயல் இழந்ததால் மரணம் அடைந்தார் என Hafiz Kadir தெரிவித்தார். 31 வயதுடைய சுல்கிப்ளியுடன் அந்த பயிற்சி மையத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கிய அடிப்படை பயிற்சியில் இதர 251 பேர் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!