Latestமலேசியா

குறைந்த செலவில் வாழ ஏற்ற உலகின் முதலிட நகரமாக பினாங்கு தேர்வு – டிஜிட்டல் நாடோடிகளுக்கு சிறந்த இடம்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 30 – இணையம் மூலம் தொலைதூரத்தில் வேலை செய்துகொண்டு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள், குறைந்த செலவில் வாழ ஏற்ற உலகின் சிறந்த நகரமாக பினாங்கு மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

15 நாடுகளைச் சேர்ந்த 26 நகரங்களை உள்ளடக்கிய ஆய்வில், பினாங்கு 0.78 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. தென் கொரியாவின் பூசான் இரண்டாவது இடத்திலும், கோலாலம்பூர் மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றன.

இந்த ஆய்வின்படி, பினாங்கில் வாடகை உட்பட மாதாந்திர வாழ்க்கைச் செலவு சுமார் 3,860 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த வாழ்க்கைச் செலவு, சிறந்த இணைய வசதி, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுத் தொலைதூரப் பணியாளர்கள் மலேசியாவில் தங்குவதற்கான DE Rantau Nomad Pass திட்டம் ஆகியவை பினாங்கின் சிறப்பம்சங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அங்கீகாரம் பினாங்கின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வப் பொருளாதாரக் குழுத் தலைவர் வோங் ஹொன் வை (Wong Hon Wai) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!