Latestமலேசியா

குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு கொடுத்த அக்மால்: நிராகரித்த அரசுத் தரப்பு

புக்கிட் மெர்தாஜாம், அக்-26-பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைத் திரும்பப் பெறக் கோரிய மனுவை அரசுத் தரப்பு நிராகரித்துள்ளது. அரசுத் தரப்பு இயக்குநர் Muna Mohamed Jaafar அம்முடிவை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Akmalலின் அக்மலின் சட்டக் குழுவுடன் அதன் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அத்தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார். அதனை அடுத்து, Akmalலின் முதன்மை வழக்கறிஞர் Aizat Azam, நிராகரிக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து இரண்டாவது மனுவை நேரடியாகச் சட்டத்துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்கத் தமது கட்சிக்காரர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது மனுவைச் சமர்ப்பிப்பதற்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அம்மனு தொடர்பான முடிவை அறிவிக்க நீதிமன்றம் அடுத்தாண்டு ஜனவரி 4ஆம் தேதியை நிர்ணயித்தது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, Merlimau சட்டமன்ற உறுப்பினரான 38 வயது Akmal, முகநூலில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, விசாரணையை எதிர்கொள்ளத் தயார் எனக் கூறியிருந்தார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 505(b) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது மட்டும் வழக்குத் தொடரப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரியான சூழலில் உள்ளவர்களிடம் வேறுபட்ட அணுகுமுறை பின்பற்றப்படுவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புக் கொள்கை ஆகியவற்றை முன்வைத்து, Akmal ஏற்கெனவே நீதிமன்ற மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

முதல் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் உண்மைகள் மற்றும் சட்ட அம்சங்களை விளக்கி இரண்டாவது மனுவைச் சமர்ப்பிக்க உள்ளதாக Aizat தெரிவித்தார். அவ்வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது மனுவின் முடிவுக்காகக் காத்திருக்க கூடுதல் அவகாசம் கோரவும் தற்காப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!