Latestஉலகம்

குளிரூட்டியிலிருந்து இரைச்சல்; சிட்னி ஆடவருக்கு RM31,000 அபராதமா?

ஆஸ்திரேலியா, Sydney-யில், தனது வீட்டில் மிகுந்த சத்தத்துடன் இயங்கும் குளிரூட்டியை தொடர்ந்து பயன்படுத்தினால், ஆடவர் ஒருவருக்கு பத்தாயிரம் ஆஸ்திரேலிய டாலர் அல்லது 31 ஆயிரத்து 220 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாடவரின் அண்டை வீட்டுக்காரர்கள் செய்த புகாரை தொடர்ந்து, Willoughby நகராண்மைக் கழகம் அந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

George எனும் அந்த ஆடவரின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி பேர் இரைச்சலை ஏற்படுத்துவதால், அது தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அந்த குளிரூட்டியை பயன்படுத்த முடியும் அல்லது குளிரூட்டியை முழுமையாக மாற்ற வேண்டுமென, ஜோர்சுக்கு இரு தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2017-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பேரிரைச்சலை ஏற்படுத்தும் சாதனங்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!