Latestமலேசியா

குவாந்தானில் மாணவி எலிசா மரணம்: மகளை இழந்த துயரத்திலும் குடும்பத்தை மேலும் வதைக்கும் இணைய வதந்திகள்

குவாந்தானில் கல்விக் கனவுகளுடன் பயின்று வந்த 19 வயது மாணவி எலிசா ஜோனோவாவின் மரணம், அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. தனித்தாயின் அரவணைப்பில் வளர்ந்த எலிசாவை இழந்த துயரம் ஒருபுறமிருக்க, குடும்பத்தின் வளர்ப்பையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற வதந்திகள் தங்களை மேலும் காயப்படுத்துவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எலிசாவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், உண்மை தெரியாமல் எலிசாவையோ அவரது குடும்பத்தினரையோ குற்றம்சாட்ட வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் குடும்பத்தினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அக்டோபர் 6ஆம் தேதி காலை எலிசா சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதனிடையே எலிசாவின் மரணத்தைச் சூழ்ந்த உண்மைகளைக் கண்டறிய போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!