குவாந்தான், ஏப்ரல் 3 – பஹாங்கில், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 128 அந்நிய நாட்டுப் பெண்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரையில், குவாந்தான் உட்பட தெமர்லோ, பெந்தோங், ரவுப், லிபிஸ், ஜெராண்டோட் ஆகிய மாவட்டங்களிலுள்ள, தங்கும் விடுதிகள், கேளிக்கை மையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை குறி வைத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அவர்கள் கைதானார்கள்.
அந்த சோதனையின் போது, பல்வேறு குற்றங்கள் தொடர்பில், 20 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 158 பேர் கைதுச் செய்யப்பட்டதை, பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் உறுதிப்படுத்தினார்.
அதில், 21 ஆடவர்களும், எட்டு பெண்களும் உள்நாட்டவர்கள். அவர்கள், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கேளிக்கை மையங்கள், உணவகங்கள் மற்றும் உடம்பு பிடி நிலையங்களின் உரிமையாளர்கள் ஆவர்.
அந்த சோதனை நடவடிக்கையின் போது, உணவகம் என்ற போர்வையில் செயல்பட்டு வந்த ஏழு கேளிக்கை மையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.