Latestமலேசியா

குவாலா பிலா பள்ளி விடுதியில் இரண்டாம் படிவ மாணவர் மரணம்: பகடிவதை காரணமா?

குவாலா பிலா, செப்டம்பர்-26 – நெகிரி செம்பிலான், குவாலா பிலா​வில் உள்ள பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது Muhammad Idlan Fareeq Shahril Shahriul சுயநினைவற்ற நிலையில் கிடந்ததாகவும், பின்னர் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக அங்கு உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து சவப் பரிசோதனைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குச் சடலம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

​மாணவர் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், இது பகடிவதை காரணமாகவே நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

​எனினும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் மாவட்டப் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!