Latestமலேசியா

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ECRL ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. என நிர்ணயம்

கோலாலம்பூர், நவம்பர் 12 – கிழக்குக் கடற்கரை ரயில் பாதையான ECRL-இன் அதிகபட்ச இயக்க வேகம் மணிக்கு 160 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் உள்கட்டமைப்பு வடிவமைப்புத் தலைவர் முகமட் ரஹிமான் அப்துல் ரஹ்மான் (Mohd Rahiman Ab Rahman) தெரிவித்துள்ளார்.

ரயில் பாதையின் அமைப்பு, வளைவுகள் மற்றும் நிலையங்களின் இடங்களைக் கருத்தில் கொண்டு இந்த வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பைப் பாதிக்காமல், விரைவு ரயிலின் பயண நேரத்தை சுமார் நான்கு மணி நேரமாக வைத்திருக்க முடியும்.

இதற்கிடையில், 16.39 கிலோ மீட்டர் நீளமுள்ள கெந்திங் சுரங்கப்பாதை (Terowong Genting), தென்கிழக்காசியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் 665 கிலோ மீட்டர் ECRL பாதையிலுள்ள 40 சுரங்கப்பாதைகளின் தோண்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

மேலும், வெள்ள அபாயம் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிகால் வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!