
தஸ்லி நிறுவனத்தின் தோற்றுநரும் நிர்வாக இயக்குநருமான டத்தோ டாக்டர் ரவி, தனது 63 வயதில் பூத்தானில் காலமானார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ‘உலக அமைதி’ நிகழ்வில் பங்கேற்பதற்காக பூத்தானுக்குச் சென்றிருந்த அவர், அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
அவரது உடல் இன்று மலேசியாவுக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக வணக்கம் மலேசியா காத்திருக்கிறது.



