Latestமலேசியா

கூடுதல் எடையை ஏற்றிச் சென்ற 22 லோரிகள் மீது ஜே.பி.ஜே நடவடிக்கை

கோலாலம்பூர், நவ 28 – சிலாங்கூர் சாலை போக்குவத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் எடையை ஏற்றிச் சென்ற லோரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 12 மணியிலிருந்து காலை 10 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 22 லோரிகளுக்கு எதிராக சாலை போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்த லோரியிலிருந்து சரக்குகளின் எடையை நிறுக்கும்படி லோரி ஓட்டுனர்கள் பணிக்கப்பட்டனர். கூடுதலான எடை உட்பட பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக அந்த லோரி ஓட்டுனர்களுக்கு குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன. பல லோரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான எடையுள்ள சரக்குளை ஏற்றிச் சென்றதை தாங்கள் கண்டறிந்ததாக சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.

வழக்கமாக சோதனை நடவடிக்கைக்கு பயன்படுத்தும் ஜே.பி.ஜே வாகனங்களுக்கு பதிலாக மாற்று வாகனங்களில் பயணம் செய்ததன் மூலம் அதிக எடையை ஏற்றியிருந்த லோரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிந்ததாக அஸ்ரின் கூறினார். கூட்டரசு நெடுஞ்சாலை, NKVE நெடுஞ்சாலை, Elite நெடுஞ்சாலை மற்றும் Gutrie நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து துறை லோரிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக அஸ்ரின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!