Latestமலேசியா

கூலிமில் டிரெய்லர் லோரி உட்பட 13 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நால்வர் காயம்

கூலிம், ஜூன் 11 – பாலிங்கை  நோக்கிச் செல்லும்   BKE நெடுஞ்சாலையில்  21 ஆவது கிலோமீட்டரில்  டிரெய்லர் லோரி உட்பட 13 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில்  குறைந்தது  நால்வர் காயம் அடைந்தனர்.  அந்த  டிரெய்லர் லோரி இதர வாகனங்களை மோதிய சம்பவம் நடந்த  இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல்   ஏற்பட்டது. இன்று காலை மணி  7.37 அளவில் இந்த விபத்து குறித்து  தகவல் கிடைக்கப்பெற்றவுடன்   சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு  தீயணைப்பு  படை வீரர்கள்  விரைந்ததாக  கூலிம்  தீயணைப்பு மற்றும்  மீட்பு நிலையத்தின்  தலைவர்  ஹமிசுல்  அஸ்வான் ஹம்டான் ( Hamizul Azwan  Hamdan )தெரிவித்தார்.   

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைவதற்கு   முன்னதாகவே பொதுமக்களின் உதவியோடு  விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட நால்வர்   மீட்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும்   ஆம்புலன்ஸ்  மூலம்  சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். விபத்து ஏற்பட்ட  சாலையில்   துப்புறவுப்படுத்தும் பணியிலும்  தீயணைப்பு  வீரர்கள் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!