Latestமலேசியா

கெடாவின் குத்துச்சண்டை வரலாற்றில் முதல் SUKMA தங்கம்; சாதனை படைத்த சுபாஷினி சிவா!

ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 – SUKMA வரலாற்றில் குத்துச்சண்டைப் போட்டியில் இதுவரை தங்கம் வென்றிராத கெடாவுக்கு, முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து புதிய வரலாறு படைத்துள்ளார் மலேசிய இந்திய வீராங்கனை சுபாஷினி சிவா.

SUKMA XXII Selangor 2026 போட்டியில், பெண்களுக்கான 45 முதல் 48 கிலோகிராம் Minimum Weight பிரிவில் கெடாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுபாஷினி, நேற்று ஆகஸ்ட் 23ஆம் தேதி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதற்கு முந்தைய SUKMA போட்டிகளில் கெடா குத்துச்சண்டை அணி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், சுபாஷினியின் வெற்றி அந்த நீண்டகால தங்கப் பதக்கக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

UKM-இல் உள்ள Dewan Tun Abdullah Mohd Salleh அரங்கில் நடைபெற்ற போட்டியில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், கெடாவின் SUKMA குத்துச்சண்டை வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் சுபாஷினி பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!