Latestமலேசியா

தெலுக் இந்தானில் 6 இந்தோனேசிய பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய சகோதரிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தெலுக் இந்தான், ஆகஸ்ட் 24 – தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், 6 இந்தோனேசிய பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய இரு சகோதரிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவ்விரண்டு பெண்மணிகளும், பணிப்பெண்களின் சம்பளத்தையும் கடப்பிதழ்களையும் பல ஆண்டுகள் தங்களிடம் வைத்திருந்தனர். இதனால் பெண்கள் பணத்திற்காக அவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வீட்டு வேலைக்காக பணியமர்த்தப்பட்ட பெண்கள் பின்னர் சகோதரிகளின் கடைகள் மற்றும் பொம்மைக் கடைகளில் வேலை செய்ய வைக்கப்பட்டனர். ஒருவருக்கு 2012 முதல் 2020 வரை சம்பளம் வழங்கப்படவில்லை.

பெண்களின் சம்பளத்தைத் தடுத்து வைத்து அவர்களை கட்டுப்படுத்திய விதம் “நவீன அடிமைத்தனம்” போன்றது என நீதிமன்றம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!