Latestமலேசியா

கெடாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் மரணம், மூவர் காயம் 

 

பாலிங், ஜூலை.09-Jalan Baling-Grik சாலையின் Bukit Kemangiயில் இன்று அதிகாலை இரு கார்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். அதிகாலை 2.14 மணிக்கு அவ்விபத்து குறித்த தகவல் கிடைத்து தங்களது குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Baling தீயணைப்பு, மீட்புத்துறைத் தலைவர் Zulkhairi Mat Tanjil தெரிவித்தார். அவ்விபத்து Proton Saga மற்றும் Proton Waja கார்களை உட்படுத்தியிருந்தன. Proton Saga காரில் ஒரு துரித உணவகத்தில் பணி புரியும் மூன்று ஆண்கள் பயணித்ததாகவும், Proton Waja காரை ஒருவர் மட்டும் ஓட்டி வந்ததாகவும் அவர் கூறினார். Proton Saga காரில் இருந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். எனினும் அவர் வாகனத்தில் சிக்கிக் கொள்ளவில்லை.

 

Proton Waja ஓட்டுநர், இருக்கையில் சிக்கிக்கொண்டார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மீட்கப்பட்டார். அவரும் Proton Sagaவில் இருந்த மேலும் இருவரும் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் பாலிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. அவ்விபத்தால் இரு பக்கச் சாலைகளிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!